ஈவு இரக்கமற்ற இந்த காட்டாட்சி வீழ்வது உறுதி - உதயநிதி ஸ்டாலின்
சென்னை, 16 ஜூன் (ஹி.ச.) கடந்த 24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் தமிழகத்தில் நடந்துள்ளது. இது தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்அவரது எக்ஸ் பதிவில், நீங்கள் நியமித்ததாகக் கூறும் efficient officers என்ன செய்கிறார்கள், முதலம
உதயநிதி


சென்னை, 16 ஜூன் (ஹி.ச.)

கடந்த 24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் தமிழகத்தில் நடந்துள்ளது.

இது தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்அவரது எக்ஸ் பதிவில்,

நீங்கள் நியமித்ததாகக் கூறும் efficient officers என்ன செய்கிறார்கள், முதலமைச்சர் அவர்களே?

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளை, பெற்றோருக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு, இந்த அரசு மனிதநேயமற்ற முறையில் செயல்படுகிறது.

சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இதற்கு அரசு பதிலளிக்க வேண்டும்.

ஈவு இரக்கமற்ற இந்த காட்டாட்சி வீழ்வது உறுதி எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், WhySilentCM? என்ற ஹேஷ்டேக்குடன், தமிழக அரசையும் முதலமைச்சரையும் கேள்வி எழுப்பி உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam