திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 16 வயது சிறுமியிடம் அத்துமீறல் - போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
திருநெல்வேலி, 16 ஜூன் (ஹி.ச.) திருநெல்வேலி மாவட்டத்தில் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பெருமாள் என்பவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புக
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி 16 வயது சிறுமியிடம் அத்துமீறல்  - போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு


திருநெல்வேலி, 16 ஜூன் (ஹி.ச.)

திருநெல்வேலி மாவட்டத்தில் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பெருமாள் என்பவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் முதற்கட்ட தகவல்கள் உறுதியானதை அடுத்து, பெருமாள் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தலைமறைவாக உள்ள குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தேவையான மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் தெரிவித்தனர்.

18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை திருமண ஆசை காட்டி ஏமாற்றுவது போக்சோ சட்டப்படி கடுமையான தண்டனைக்குரிய குற்றம் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்கள் 1098 என்ற குழந்தைகள் உதவி எண்ணையோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தையோ தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b