புகழ்பெற்ற இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்
தமிழ்நாடு, 17 ஜூன் (ஹி.ச.) புகழ்பெற்ற இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் 1973ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி கோவாவில் பிறந்தார். இவருடைய தாயார் ஜெனிபர் பயஸ் இந்திய கூடைப்பந்து அணிக்கு தலைமை வகித்தவர். தந்தை வெஸ் பயஸ் 1972 ஒலிம்பிக் போட்டிகளில் வெண
க


தமிழ்நாடு, 17 ஜூன் (ஹி.ச.)

புகழ்பெற்ற இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் 1973ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி கோவாவில் பிறந்தார்.

இவருடைய தாயார் ஜெனிபர் பயஸ் இந்திய கூடைப்பந்து அணிக்கு தலைமை வகித்தவர்.

தந்தை வெஸ் பயஸ் 1972 ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றவர்.

மேலும், இந்திய ஹாக்கி அணியில் விளையாடியவர்.

லியாண்டர் பயஸ் இந்தியாவின் மிகச்சிறந்த மற்றும் புகழ்பெற்ற சர்வதேச டென்னிஸ் விளையாட்டு வீரர் ஆவார்.

இவர் டென்னிஸ் வரலாற்றின் மிக வெற்றிகரமான இரட்டையர் பிரிவு வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

1996 ஆம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் தனிநபர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

இவர் மகேஷ் பூபதியுடன் இணைந்து சர்வதேச டென்னிஸ் அரங்கில் விம்பிள்டன் மற்றும் பிரெஞ்ச் ஓபன், சர்வதேச கிராண்ட் ஸ்லாம் போட்டிகளான ஆஸ்திரேலிய ஓபன், அமெரிக்கன் ஓபன் போட்டி என அனைத்திலும் பட்டங்களை வென்றவர்.

இவர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா, பத்மஸ்ரீ, பத்ம பூஷண் ஆகிய விருதுகளை வென்றுள்ளார்.

ஒலிம்பிக் பதக்கம்:

1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

கே. டி. ஜாதவ்விற்குப் பிறகு தனிநபர் பிரிவில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்தியர் இவரே ஆவார்.

கிராண்ட்ஸ்லாம் வெற்றிகள்:

டென்னிஸ் விளையாட்டின் இரட்டையர் (Mens Doubles) மற்றும் கலப்பு இரட்டையர் (Mixed Doubles) பிரிவுகளில் பல கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

பூபதி - பயஸ் கூட்டணி:

இந்திய வீரர் மகேஷ் பூபதியுடன் இணைந்து இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் 1 ஜோடியாகத் திகழ்ந்தனர்.

இவர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் என்று அன்போடு அழைக்கப்பட்டனர்.

டேவிஸ் கோப்பை:

இந்தியாவின் சார்பாக டேவிஸ் கோப்பை (Davis Cup) தொடர்களில் பங்கேற்று அதிக வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார்.

விருதுகள்விளையாட்டுத் துறையில் இவரின் பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு பல்வேறு உயரிய விருதுகளை வழங்கியுள்ளது:

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது தற்போது மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதுஅர்ஜுனா விருதுபத்மஸ்ரீ விருதுபத்ம பூஷண் விருது.

பாஜகவில் இணைவு:

டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, மார்ச் 2026 இல் இவர் பாரதிய ஜனதா கட்சியில் (BJP) அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.

தேர்தல் களம்:

மேற்கு வங்காளச் சட்டமன்றத் தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட உள்ளார்.

Hindusthan Samachar / Durai.J