சொகுசு பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் 6 பேர் பலி - 20 பேர் படுகாயம்
வதோதரா, 17 ஜூன் (ஹி.ச.) குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் இருந்து ராஜஸ்தான் நோக்கி சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, வதோதரா மாவட்டத்தில் வதோதரா-ஹலோல் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் கோதம்பி கிராமம் அருகே அப்பேருந்
சொகுசு பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் 6 பேர் பலி - 20 பேர் படுகாயம்


வதோதரா, 17 ஜூன் (ஹி.ச.)

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் இருந்து ராஜஸ்தான் நோக்கி சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது, வதோதரா மாவட்டத்தில் வதோதரா-ஹலோல் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் கோதம்பி கிராமம் அருகே அப்பேருந்து சென்றபோது, லாரி ஒன்றின் பின்பக்கத்தில் எதிர்பாராத விதமாக மோதி விபத்திற்குள்ளானது.

சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு, பழுது பார்க்கப்பட்ட லாரி மீது பேருந்து மோதிய விபத்தில், பேருந்தின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.

இந்த சம்பவத்தில் 6 பேர் பலியானார்கள். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

சம்பவம் பற்றி அறிந்து ஜரோத் காவல் நிலைய போலீசார் உடனடியாக சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

தேசிய பேரிடர் பொறுப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

போலீசார் இவ்விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b