அகமதாபாத் எல்.டி. பொறியியல் கல்லூரி கேண்டீனில் முட்டை விற்பனை விவகாரம் – மாணவர்கள் புகார்
அகமதாபாத் , 17 ஜூன் (ஹி.ச.) குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள எல் டி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கல்லூரி கேண்டீனில், சைவ உணவுக் கட்டுப்பாடு மீறப்பட்டதாக கூறப்படும் சம்பவம் மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முழுமையாக சைவ உணவுக் கேண்டீன்
A


அகமதாபாத் , 17 ஜூன் (ஹி.ச.)

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள எல் டி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கல்லூரி கேண்டீனில், சைவ உணவுக் கட்டுப்பாடு மீறப்பட்டதாக கூறப்படும் சம்பவம் மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முழுமையாக சைவ உணவுக் கேண்டீன் என செயல்பட்டு வந்த இடத்தில் ஆம்லெட் மற்றும் வேகவைத்த கோழி முட்டைகள் விற்பனை செய்யப்பட்டதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனால் சைவ உணவுக்கான விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், தங்கள் மத மற்றும் கலாச்சார உணர்வுகள் பாதிக்கப்பட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், சைவ உணவுகள் மற்றும் முட்டை உணவுகள் ஒரே சமையலறை பாத்திரங்களில் தயாரிக்கப்படுவதாகவும் மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கும்,குஜராத் டெக்னாலஜிகல் யுனிவர்சிட்டிக்கும் எழுத்து மூலம் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது.

கேண்டீன் நடத்துநருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதுடன், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழ்ந்தால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் கேண்டீனில் முட்டை சார்ந்த உணவுகள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளன.

சுமார் 7,000 மாணவர்கள் பயிலும் இந்த கல்லூரியில் உணவின் தரம் மற்றும் சுகாதாரம் குறித்தும் தொடர்ந்து கேள்விகள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA