தெலங்கானா மக்களின் அன்பை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன்- பவன் கல்யாண் நெகிழ்ச்சி
ஹனம்கொண்டா , 17 ஜூன் (ஹி.ச.) ஆந்திரப் பிரதேச துணை முதல்-மந்திரியும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண், அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட தனது ரசிகர் நிரஞ்சனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், தனது ஹனம்கொண்டா பயணத்திற்கு முழு ஒத்துழைப்பு
A


ஹனம்கொண்டா , 17 ஜூன் (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேச துணை முதல்-மந்திரியும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண், அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட தனது ரசிகர் நிரஞ்சனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும், தனது ஹனம்கொண்டா பயணத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, மாநில அரசு மற்றும் காவல்துறைக்கு நன்றி தெரிவித்தார்.

ஹனம்கொண்டாவைச் சேர்ந்த நிரஞ்சன் என்ற இளைஞர், அரிய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பவன் கல்யாணை ஒருமுறை நேரில் சந்திக்க வேண்டும் என்பது தனது நீண்டநாள் விருப்பம் என அவர் சமீபத்தில் வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோ பவன் கல்யாணின் கவனத்திற்குச் சென்றதைத் தொடர்ந்து, அவர் ஹனம் கொண்டாவுக்கு சென்று நிரஞ்சனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,

அரிய நோயுடன் போராடி வரும் நிரஞ்சனின் தைரியமும், தன்னம்பிக்கையும் மிகவும் ஊக்கமளிப்பவை.

கடினமான சூழ்நிலைகளிலும் அவர் காட்டும் மன உறுதி பாராட்டத்தக்கது.

அவர் விரைவில் முழு நலத்துடன் குணமடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.

மேலும், தனது வரங்கல்-ஹனம்கொண்டா பயணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முழு ஒத்துழைப்பு வழங்கிய தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, மாநில அரசு, காவல்துறை உயர் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

அதேபோல், தெலங்கானா மக்கள் தன்னிடம் காட்டி வரும் அன்பும் பாசமும் மறக்க முடியாதவை என்றும், அவர்களின் அன்பை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன் என்றும் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, அன்புள்ள நிரஞ்சன், உன் தைரியம் உன் சிரமங்களை விட பெரியது. விரைவில் முழு ஆரோக்கியத்துடனும் புன்னகையுடனும் உன்னை மீண்டும் பார்க்க விரும்புகிறேன் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA