தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடக்கம்!!
சென்னை, 17 ஜூன் (ஹி.ச.) பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகாரம் பெற்றுள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகம் இளங்கலை பட்டப்படிப்புகள், முதுகலை பட்டப்படிப்புகளுடன் 48 சான்றிதழ், பட்டய படிப்புகளை வழங்கி வருகிறது. குறிப்பாக தொலைதூரக் கல்வி திட்டத்
Application registration for student admission at Tamil Nadu Open University has commenced


சென்னை, 17 ஜூன் (ஹி.ச.)

பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகாரம் பெற்றுள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகம் இளங்கலை பட்டப்படிப்புகள், முதுகலை பட்டப்படிப்புகளுடன் 48 சான்றிதழ், பட்டய படிப்புகளை வழங்கி வருகிறது.

குறிப்பாக தொலைதூரக் கல்வி திட்டத்தில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, மேலாண்மை, வர்த்தகம், சமூகவியல், சமூகப் பணி, பொருளாதாரம், பொது நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 15 இளங்கலை படிப்புகளையும் 14 முதுகலை படிப்புகளையும் வழங்கி வருகிறது.

இவை தவிர, பல்வேறு பாடங்களில் 11 டிப்ளமா படிப்புகள், 12 சான்றிதழ் படிப்புகள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த படிப்புகளில் 2026-27ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பல்கலை.யின் www.tnou.ac.in இணைய வழி மூலம் சமர்ப்பிக்கலாம்.

வெவ்வேறு பாடப் பிரிவுகள், அவற்றுக்கான அடிப்படைக் கல்வித் தகுதிகள், மாணவர் சேர்க்கை விதிமுறைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மேற்கண்ட இணையதள முகவரிக்கு சென்று தெரிந்துகொள்ளலாம் என தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b