Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 17 ஜூன் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
அருமனை பகுதியில் இருந்து மேல்புறம் நோக்கி இன்று இருசக்கர வாகனத்தில் வாலிபர் ஒருவர் சென்று கொண்டிருந்தார்.
உத்தரங்கோடு பகுதியில் சென்றபோது திடீரென தனது வாகனத்தை வலதுபுறமாக திருப்பியதாக கூறப்படுகிறது. அப்போது பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் முன்னால் சென்ற வாகனத்தின் மீது பலமாக மோதியது.
இந்த மோதலின் தாக்கத்தால் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். குறிப்பாக பின்னால் வந்த இளைஞர் மயக்கமடைந்த நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது.
விபத்தை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு, காயமடைந்த இருவரையும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam