Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 ஜூன் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பதினேழாவது பேரவைக்கான (2026–2027) அலுவல் ஆய்வுக் குழு உறுப்பினர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பேரவைத் தலைவரான J. C. D. பிரபாகர் குழுவின் தலைவராக செயல்படுகிறார்.
குழுவில் முதலமைச்சர் ஜோசப் விஜய், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சர் ரா. நிர்மல் குமார், சுற்றுலாத் துறை அமைச்சர் செ. ராஜேஷ் குமார், சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு, அரசுத் தலைமைக் கொறடா
ரா. சபரிநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, எ.வ. வேலு, சிவங்கர், எடப்பாடி பழனிசாமி, ஓ.எஸ். மணியன், சௌமியா அன்புமணி, ஆர். செல்லசுவாமி, இராமச்சந்திரன் மற்றும் எஸ்.எஸ்.பி. சையது பாரூக் பாஷா ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அலுவல் ஆய்வுக் குழுவின் முதல் கூட்டம் நாளை (ஜூன் 18) பிற்பகலில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடரின் அலுவல்கள், விவாதங்களுக்கு ஒதுக்கப்படும் நேரம் மற்றும் அவை நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P