Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 17 ஜூன் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே ஒட்டுப்பட்டி பிரிவு என்ற இடத்தில், இரவு திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டு வழியாக கொடைக்கானல் நோக்கி சென்ற காரும், வத்தலக்குண்டுவில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் மோதி பயங்கரமாக விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் கொடைக்கானலுக்கு காரை ஓட்டிச் சென்ற கொடைக்கானல் மணிகண்டன் (42) என்பவர் சம்பவ இடத்தில், உயிரிழந்தார்.
மேலும், இந்த விபத்தில் திண்டுக்கல் நோக்கி சென்ற காரில் இருந்த, 2 பெண்கள் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தால் இரவு நேரத்தில் அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, உயிரிழந்த மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN