4 தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை இல்லை - உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை, 17 ஜூன் (ஹி.ச.) அதிமுகவைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து காலியாக உள்ள நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அதேவேளையில், பதவி வ
High court


சென்னை, 17 ஜூன் (ஹி.ச.)

அதிமுகவைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து காலியாக உள்ள நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அதேவேளையில், பதவி விலகிய நான்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட சபாநாயகரின் நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி அதிமுக தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், சபாநாயகர் மற்றும் சட்டமன்ற செயலாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு பிறப்பித்த இந்த உத்தரவால், இடைத்தேர்தல் அறிவிப்புக்கு உடனடி சட்டத் தடை எதுவும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

அதே நேரத்தில், ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை தொடர்பான சட்டப்பூர்வ விவகாரம் குறித்து நீதிமன்ற விசாரணை தொடர உள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ