குற்றால அருவிகளில் குறையாத சுற்றுலா பயணிகள் கூட்டம் - ஆனந்த குளியல் போட்டு மகிழ்ச்சி
தென்காசி, 17 ஜூன் (ஹி.ச.) தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் தற்போது தண்ணீரானது சீராக கொட்டி வரும் நிலையில், சீராக கொட்டி வரும் தண்ணீரில் இரவு, பகலாக சுற்றுலா பயணிகள் ஆனந்த
Courtallam Aiyappa


தென்காசி, 17 ஜூன் (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் தற்போது தண்ணீரானது சீராக கொட்டி வரும் நிலையில், சீராக கொட்டி வரும் தண்ணீரில் இரவு, பகலாக சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர்.

குறிப்பாக, தற்போது குற்றால சீசனானது தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மழை குறைந்துள்ள போதிலும் அருவிகளில் நீர்வரத்து சீராக கொட்டி வருவதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை தங்களது குடும்பங்களுடன் ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர்.

அந்த வகையில் குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் இரவு நேரத்திலும் குளிக்க அனுமதி இருப்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

ஏராளமான ஆண்களும், பெண்களும் இரவிலும் அருவிகளில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்துவரும் நிலையில், சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் குற்றாலம் பகுதியானது களைகட்டி உள்ளதால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகளும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN