Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூர், 17 ஜூன் (ஹி.ச.)
கர்நாடக மாநிலத்தில் புதிய முதல்வராக டி.கே. சிவகுமார் பதவியேற்றுள்ள நிலையில், அவரது தலைமையிலான அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு ஜூன் 18-ஆம் தேதி சட்டமன்றத்தில் நடைபெற உள்ளது.
இதையொட்டி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று இரவு பெங்களூரு அருகே உள்ள தனியார் ரிசார்ட்டில் நடைபெற்றது.
முதல்வர் டி.கே. சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எம்.எல்.ஏக்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும், எந்தவித குழப்பமும் ஏற்படாமல் கட்சி முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்படுவது எப்படி என்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதி செய்வதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஜூன் 18-ஆம் தேதி காலை அங்கிருந்து நேரடியாக சட்டமன்றத்திற்கு அவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Hindusthan Samachar / VINOTH KUMAR P