மு க ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்எல்ஏக்களுக்கு சிறப்பு பயிற்சிக் கூட்டம்
சென்னை, 17 ஜூன் (ஹி.ச.) தமிழக சட்டப்பேரவை நாளை கூடவுள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு பயிற்சிக் கூட்டம் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சிக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, சட்டப்பேரவையில் உறுப்பி
மு.க.ஸ்டாலின்


சென்னை, 17 ஜூன் (ஹி.ச.)

தமிழக சட்டப்பேரவை நாளை கூடவுள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு பயிற்சிக் கூட்டம் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

இந்தப் பயிற்சிக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும், மக்களின் பிரச்சினைகளை விதிகளுக்கு உட்பட்டு எவ்வாறு முன்வைக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவை நடைமுறைகள், விதிமுறைகள், கேள்வி நேரம், கவன ஈர்ப்பு தீர்மானங்கள், விவாதங்களில் பங்கேற்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து உறுப்பினர்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன.

குறிப்பாக, புதிய மற்றும் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு சட்டமன்ற நடைமுறைகள் குறித்து விரிவான பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

சட்டப்பேரவை நாளை தொடங்க உள்ள நிலையில், உறுப்பினர்களின் அவை செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்தப் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam