Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 17 ஜூன் (ஹி.ச.)
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆளுங்கட்சியான த.வெ.க-வில் இணைந்து வருவது, தற்போது அரசுக்கு ஆதரவு அளித்து வரும் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மீதான நம்பிக்கையின்மையால் தானா என்று முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
அதிமுகவைச் சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் அரசை ஆதரித்து வாக்களிப்பதற்காக அவர்களில் 8 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என கூறப்பட்டதாக பரவிய தகவல்களின் நிலை என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து வரும் உறுப்பினர்கள் அமைச்சர் பதவியை எதிர்பார்த்துதானா இந்த முடிவை எடுக்கிறார்கள் என்றும், பதவியை ராஜினாமா செய்தவர்களுக்கு ஆறு மாதங்களுக்குள் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகும் வாய்ப்பு உள்ள நிலையில், அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்க அரசு தயாரா என்றும் அவர் வினவியுள்ளார்.
25 எம்எல்ஏக்களுக்கும் வழங்கப்பட்டதாக கூறப்படும் வாக்குறுதிகளை த.வெ.க அரசு நிறைவேற்றுமா அல்லது தொடர்ந்து ஏமாற்றுமா என்றும் அப்பாவு தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ