செங்கல்பட்டில் ஜூன் 19 ஆம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
செங்கல்பட்டு, 17 ஜூன் (ஹி.ச) தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் மாவட்ட ஆட்சித்தலைவர் அல்லது வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் நலன்காக்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. விவசாயிகள் தங்களின் விவசாயம் சார்ந
Farmers' Welfare Day meeting in Chengalpattu on June 19


செங்கல்பட்டு, 17 ஜூன் (ஹி.ச)

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் மாவட்ட ஆட்சித்தலைவர் அல்லது வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் நலன்காக்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

விவசாயிகள் தங்களின் விவசாயம் சார்ந்த கோரிக்கைகள், மின்சாரப் பிரச்சனைகள், கடனுதவி மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் போன்ற புகார்களை மனுக்களாக அளித்து உடனடி தீர்வு காண இக்கூட்டம் ஒரு சிறந்த தளமாக விளங்குகிறது.

பயிர்க்கடன்கள் மற்றும் மானியங்கள்.தங்கு தடையற்ற விவசாய மின்சாரம் மற்றும் புதிய மின் இணைப்புகள்,கால்வாய், குளங்கள் தூர்வாருதல் மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்,வனவிலங்குகளால் (காட்டுப்பன்றி, மயில் போன்றவை) பயிர்களுக்கு ஏற்படும் சேதங்கள்,விளைபொருட்களுக்கு உரிய விலை மற்றும் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடு குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

அந்த வகையில் செங்கல்பட்டு தாசில்தார் அலுவலகத்தில், விவசாயிகள் நலன்காக்கும் நாள் கூட்டம், தாசில்தார் பாலாஜி தலைமையில், வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் வீரப்பன் அறிவித்துள்ளார்.

அதேபோல் மதுராந்தகம் தாசில்தார் நரேந்திரன் மற்றும் தாம்பரம் தாசில்தார் முரளி தலைமையில் நடைபெறவுள்ளது. .

இந்த கூட்டத்தில், விவசாயிகள் பங்கேற்று, விவசாயம் சார்ந்த கோரிக்கைகள் மனுக்களாக அளித்து பயன்பெறலாம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b