சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு - பயணிகள் அதிருப்தி
சென்னை, 17 ஜூன் (ஹி.ச.) சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மற்றும் அமெரிக்கா-ஈரான் சூழ்நிலைகள் காரணமாக விமான எரிபொருள் விலை (ATF) பெருமளவில் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்ட
Flight services disrupted in Chennai


சென்னை, 17 ஜூன் (ஹி.ச.)

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மற்றும் அமெரிக்கா-ஈரான் சூழ்நிலைகள் காரணமாக விமான எரிபொருள் விலை (ATF) பெருமளவில் அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் ₹107.74 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு சுமார் ₹99.55 ஆகவும் விற்பனையாகிறது.

இதனால் சென்னை உட்பட பல நகரங்களில் விமானங்களின் எண்ணிக்கை தற்காலிகமாகக் குறைக்கப்பட்டு, விமான கட்டணங்களும் கடுமையாக உயர்ந்துள்ளன.

இதனிடையே எரிபொருள் செலவைக் கட்டுப்படுத்த ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் சென்னை உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் வழங்கப்பட்டு வரும் விமான சேவைகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்துள்ளன.

சென்னையில் இருந்து இயக்கப்படும் உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்கள் எண்ணிக்கை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

எரிபொருள் விலை உயர்வால் ஏர் இந்தியா உட்பட சில விமான நிறுவனங்கள் தங்கள் சேவையைக் குறைந்துள்ளன. சிங்கப்பூர், துபாய், இலங்கை, அந்தமான், ஹைதராபாத், திருச்சி, கோவை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் விமானங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

சென்னை - சேலம் இடையே 4 விமான சேவைகள் இருந்த நிலையில் 2 ஆகவும் சென்னை-தூத்துக்குடி இடையே 12 விமான சேவைகள் இருந்த நிலையில் 4 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

நிலைமை சீரானதும் மீண்டும் விமான சேவை தொடங்கும் எனவும் ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் விளக்கம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b