Enter your Email Address to subscribe to our newsletters

லக்னோ , 17 ஜூன் (ஹி.ச.)
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான ஒரே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியது.
தொடர்ந்து நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியிலும் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், இந்தியா–ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று லக்னோவில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
ஏற்கனவே தொடரில் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது.
மறுபுறம், முதல் போட்டியில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் கட்டாயத்தில் ஆப்கானிஸ்தான் அணி உள்ளது.
இதனால் இரு அணிகளும் வெற்றிக்காக முழு வீச்சில் போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA