பாட்னாவில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்ட பீகார் அரசு நிலம் ஒதுக்கீடு
பாட்னா , 17 ஜூன் (ஹி.ச.) பீகார் மாநிலம் பாட்னாவில் கங்கை நதிக்கரை அருகே வெங்கடாஜலபதி சுவாமி திருக்கோவில் கட்டுவதற்காக திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திற்கு சுமார் 15 ஏக்கர் நிலத்தை பீகார் அரசு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த கோவில் வளாகத்துட
A


பாட்னா , 17 ஜூன் (ஹி.ச.)

பீகார் மாநிலம் பாட்னாவில் கங்கை நதிக்கரை அருகே வெங்கடாஜலபதி சுவாமி திருக்கோவில் கட்டுவதற்காக திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திற்கு சுமார் 15 ஏக்கர் நிலத்தை பீகார் அரசு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்த கோவில் வளாகத்துடன் தெப்பக்குளம், திருமண மண்டபம் மற்றும் ஆன்மிக யாத்திரை பக்தர்களுக்கான வசதிகளும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பக்தர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அனைத்து அடிப்படை கட்டுமானங்களும் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு, பீகார் முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரியை நேரில் சந்தித்து நிலம் வழங்கியதற்காக நன்றி தெரிவித்தார்.

வெங்கடாஜலபதி சுவாமியின் பெருமையை நாடு முழுவதும் பரப்பும் நோக்கிலும், அனைத்து மாநில தலைநகரங்களிலும் கோவில்கள் அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

முன்னதாக அசாம் மாநிலத்தில் காம்ரூப் மாவட்டத்தில் 10.3 ஏக்கர் நிலம் கோவில் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA