மூச்சுத் திணறலுக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண் உயிரிழப்பு
ராமநாதபுரம், 17 ஜூன் (ஹி.ச.) ராமநாதபுரம் அருகே உள்ள பாலக்கரை கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி மனைவி தமிழ்ச்செல்வி. இவருக்கு மூச்சு விடுவது சிரமம் ஏற்பட்டிருந்ததால் கடந்த மாதம் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்
Ramanathapuram GH


ராமநாதபுரம், 17 ஜூன் (ஹி.ச.)

ராமநாதபுரம் அருகே உள்ள பாலக்கரை கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி மனைவி தமிழ்ச்செல்வி. இவருக்கு மூச்சு விடுவது சிரமம் ஏற்பட்டிருந்ததால் கடந்த மாதம் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்தால் போதும் என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் அறுவை சிகிச்சை செய்ததிலிருந்து அவரது உடல்நிலை மோசமாகி தொடர் சிகிச்சையில் இருந்துள்ளார்.

மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததாலேயே அவரது உடல்நிலை மோசமானதாக கூறி கடந்த சில தினங்களுக்கு முன்பு உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்த தமிழ்ச்செல்வி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

இதனை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் ஏராளமான மருத்துவமனை வளாகத்தில் குவிந்துள்ளனர்.

அலட்சியப் போக்குடன் செயல்பட்டு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மருத்துவர்கள் கவனக்குறைவால் உயிரிழந்த தமிழ்ச்செல்வி குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும், தமிழ் செல்விக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கைகளை உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN