சென்னை - செங்கோட்டை சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை தொடக்கம்
சென்னை, 17 ஜூன் (ஹி.ச.) ரெயில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை - செங்கோட்டை இடையே இயக்கப்படவுள்ள கோடை கால சிறப்பு ரெயிலின் முன்பதிவு நாளை (18-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்
Reservations for the Chennai–Sengottai special train begin tomorrow


சென்னை, 17 ஜூன் (ஹி.ச.)

ரெயில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை - செங்கோட்டை இடையே இயக்கப்படவுள்ள கோடை கால சிறப்பு ரெயிலின் முன்பதிவு நாளை (18-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை எழும்பூரில் இருந்து ஜூன் 19, 20, 26, 27 ஆகிய தேதிகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06183) மறுநாள் காலை 9.15 மணிக்கு செங்கோட்டையை சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து ஜூன் 20, 21, 27, 28 ஆகிய தேதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடைகிறது.

இந்த சிறப்பு ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர் (கடலூர்), சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைபூண்டி, முத்துபேட்டை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (18-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b