சோசியல் மீடியாவால் வந்த ஆட்சி விரைவில் மறையப் போகிறது - திமுக தலைவர் ஸ்டாலின்
சென்னை, 17 ஜூன் (ஹி.ச.) சென்னையில் இன்று நடைபெற்ற முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் என குடும்ப சகிதமாக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் தமிழக எத
Social media-driven rule will soon disappear - DMK chief Stalin


சென்னை, 17 ஜூன் (ஹி.ச.)

சென்னையில் இன்று நடைபெற்ற முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் என குடும்ப சகிதமாக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,

இன்றைக்கு இந்த சோபா மாடல் அரசு அமைந்த பிறகு இப்படிப்பட்ட மோசமான

ஆட்சிக்கு ஓட்டுப் போட்டு விட்டோமே என மக்கள் வருத்தப்பட ஆரம்பித்துள்ளார்கள்.

இந்த சோபா மாடல் ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை. தலைவர் தலைமையில் மீண்டும் நம்முடைய கழக ஆட்சி நிச்சயம் அமையும். தமிழ்நாடு மீண்டும் வளர்ச்சிப் பாதையில் நடைபோடும். என்றார்.

திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது,

மிசாவில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த பொழுது அண்ணன் ஆற்காடு வீராசாமி அவர்களும் என்னோடு இருந்தார்கள். அந்த கொடுமையிலும் சிறையில் நிம்மதியாக திராணியோடு இருந்தேன் என்று சொன்னால் அதற்கு ஆற்காட்டார் தான் காரணமாக இருந்தார் என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு சொல்ல விரும்புகிறேன்.

இன்றைக்கும் என்னுடைய கையில் மிசா தழும்பு இருக்கிறது. அதேபோல ஆற்காட்டாருக்கு காது கேட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிறையில் நடந்த கொடுமையால் தான் அந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டார். எனவே தான் கலைஞர் ஆற்காடு வீராச்சாமியை வைரம் பாய்ந்த ஒரு தொண்டன் பல நேரங்களில் சொல்லி இருக்கிறார்.

கலைஞரிடத்தில் மட்டுமல்ல பொதுச்செயலாளராக இருந்த மறைந்த பேராசிரியரிடமும் நன்மதிப்பை பெற்றவர் ஆற்காடு வீராசாமி. திமுக பொருளாளர் பதவியை அவர் ஏற்றவாறு அதேபோல அந்த பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டிருந்தேன். திமுகவின் தலைவராக இன்று நான் பொறுப்பேற்று இருக்கிறேன் என்று சொன்னால் அதெல்லாம் ஆற்காடு வீரசாமி கொடுத்த வழிகாட்டுதல் தான்.

இந்த ஆட்சியைப் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் சோசியல் மீடியாவால் தான் இந்த ஆட்சி வந்தது. அதெல்லாம் விரைவில் மறையப் போகிறது.

கோட் போட்டுக் கொண்டு வந்தாரு, டிபன் எடுத்துக் கொண்டு வந்தார், வாட்ச் கட்டிக் கொண்டு வந்தார், செஸ் விளையாடினார், இன்று கோட் போடவில்லை பட்டுச் சட்டையில் வந்தார் இதெல்லாம் செய்திகளாக வந்து கொண்டிருக்கிறது.

இவை எல்லாம் நாட்டில் நடக்கும் மற்ற செய்திகளும் மறக்கடிக்கப்படுகிறது. நான் வேண்டுவதெல்லாம் இன்று தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருப்பவரைப் பார்த்துக் கேட்பதெல்லாம் தயவு செய்து இன்று உங்களைப் பற்றி; உங்கள் ஆட்சியைப் பற்றி வரக்கூடிய செய்திகளைப் படியுங்கள். படித்து அதில் இருக்கும் உண்மை கண்டுபிடியுங்கள். அதற்கு நடவடிக்கை எடுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b