திருச்சியில் வாகன விபத்து - காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு
திருச்சி, 17 ஜூன் (ஹி.ச.) திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் தட்சிணாமூர்த்தி தற்போது மருத்துவ விடுப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் தனது சொந்த வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் செ
Thuvakudi Police station


திருச்சி, 17 ஜூன் (ஹி.ச.)

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் தட்சிணாமூர்த்தி தற்போது மருத்துவ விடுப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் தனது சொந்த வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது துவாக்குடி அருகே உள்ள பூலாங்குடி பகுதியில் எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்துடன் அவரது வாகனம் நேருக்கு நேர் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மோதலின் தாக்கம் காரணமாக தட்சிணாமூர்த்தி பலத்த காயமடைந்தார்.

விபத்தை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அனுப்ப முயற்சி செய்தனர்.

எனினும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், உயிரிழந்த தட்சிணாமூர்த்தியின் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தை இயக்கியவர் யார், விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக துவாக்குடி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN