அருணாசலேஸ்வரர் கோவிலில் இசையமைப்பாளர் அனிரூத் சாமி தரிசனம்
திருவண்ணாமலை, 17 ஜூன் (ஹி.ச.) உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோவிலில் பிரபல இசையமைப்பாளர் அனிரூத் சாமி தரிசனம் மேற
Anirudh


திருவண்ணாமலை, 17 ஜூன் (ஹி.ச.)

உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோவிலில் பிரபல இசையமைப்பாளர் அனிரூத் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

முன்னதாக சம்மந்த விநாயகரை வணங்கி தொடர்ந்து அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்த அவர் வைகுந்த வாயிலிருந்து தீபமலையை தரிசனம் செய்த அவருக்கு அண்ணாமலையார் கோவில் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தொடர்ந்து திருக்கோவிலுக்கு வந்திருந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ஆர்வத்துடன் அவருடன் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டனர்.

தற்போது அனிருத் இசையில் ஜெயிலர் 2, ஜனநாயகன், தெலுங்கில் பாரடைஸ் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN