Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 17 ஜூன் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும், இல்லையெனில் மக்களுடன் இணைந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
மின்வாரியத்தின் நிதி நிலையை சீரமைப்பதற்காக நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் இழப்புக் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதன் சுமையை பொதுமக்கள் மீது மின் கட்டண உயர்வு மூலம் சுமத்தக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தொழில் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை உயர்த்தினாலும் அதன் பாதிப்பு பொதுமக்களையே சென்றடையும் என்றும், ஏற்கனவே அதிகரித்துள்ள மின் கட்டணத்தால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், மின் கட்டண உயர்வு அனைத்து தரப்பினருக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்றும், மக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இல்லையெனில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மக்களுடன் இணைந்து தீவிர போராட்டங்களை முன்னெடுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ