வேட்புமனு விவகாரம் - விஜய், உதயநிதி, தமிழிசை மீதான வழக்குகள் தள்ளுபடி
சென்னை, 17 ஜூன் (ஹி.ச.) வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாகக் கூறி வருமான வரித்துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழக முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்ட
TVK Vijay


Udhaya


Tamilisai Soundararajan


சென்னை, 17 ஜூன் (ஹி.ச.)

வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாகக் கூறி வருமான வரித்துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழக முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது.

விசாரணையின்போது, பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் இருந்த விவரங்களை தவெக வேட்பாளர் விஜய் பின்னர் திருத்தி தாக்கல் செய்துவிட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

மேலும், இதே கோரிக்கையுடன் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்றும் தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியது.

இதையடுத்து, தற்போதைய மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Hindusthan Samachar / P YUVARAJ