பள்ளத்தில் கவிழ்ந்த அரசு சொகுசு பேருந்து - 10க்கும் மேற்பட்டோர் காயம்
கள்ளக்குறிச்சி, 17 ஜூன் (ஹி.ச.) திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு சொகுசு பேருந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஓட்டுநர் சிவகுரு என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்த பேருந்து
Ulundurpet


கள்ளக்குறிச்சி, 17 ஜூன் (ஹி.ச.)

திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு சொகுசு பேருந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் கொண்டிருந்தது.

இந்த பேருந்தை ஓட்டுநர் சிவகுரு என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்த பேருந்து ஆனது, திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகில் சென்னை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பத்தடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலமாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து விபத்துக்குள்ளான பேருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN