பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் நடவடிக்கை - புதிய எஸ்பி மதிவாணன் எச்சரிக்கை
விழுப்புரம், 17 ஜூன் (ஹி.ச.) விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சாய் பிரணீத் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக விழுப்புரம் மாவட்ட புதிய காவல்துறை கண்காணிப்பாளராக எஸ்.மதிவாணனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்
Villupuram SP Madhivanan


விழுப்புரம், 17 ஜூன் (ஹி.ச.)

விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சாய் பிரணீத் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக விழுப்புரம் மாவட்ட புதிய காவல்துறை கண்காணிப்பாளராக எஸ்.மதிவாணனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து விழுப்புரம் மாவட்டத்தின் 26வது காவல்துறை கண்காணிப்பாளராக எஸ்,மதிவாணன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். விழுப்புரத்தில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோப்புகளில் கையெழுத்திட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக எஸ்.மதிவாணன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.மதிவாணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

மக்களின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு நெருக்கமான காவல்துறை இருந்து நாங்கள் செயல்படுவதில் உறுதியாக இருக்கிறோம். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏதாவது குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்தாலோ அல்லது புகார்கள் வந்தாலோ எந்தவிதமான காலத் தாமதமும் இன்றி உடனடியாக நடவடிக்கை எடுப்போம். போதை பொருட்கள் நடமாட்டத்தையும், பழக்கத்தையும் கட்டுப்படுத்துவதற்கு தேவையான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Hindusthan Samachar / ANANDHAN