Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 17 ஜூன் (ஹி.ச.)
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
அவர் அளித்த ராஜினாமா கடிதத்தை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு பரிசீலனை செய்து, அதே நாளில் ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார்.
இதையடுத்து விராலிமலை சட்டமன்றத் தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழக சட்டப்பேரவையில் சில தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், தற்போது விராலிமலை தொகுதியும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.
இதன் மூலம் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் ஆலோசனை நடத்தி இடைத்தேர்தல் அட்டவணையை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தொகுதியின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் மக்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான விவகாரங்களும் கவனத்தை ஈர்த்துள்ளன.
Hindusthan Samachar / P YUVARAJ