Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஜூன் (ஹி.ச.)
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடந்த மே 10-ஆம் தேதி முதல்வராக பதவியேற்றதும், மறுதினம் சட்டப்பேரவையைக் கூட்டி எம்எல்ஏ-க்கள் அனைவரும் பதவியேற்றனர்.
மே 13-ஆம் தேதி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 எம்எல்ஏ-க்களின் ஆதரவைப் பெற்று தவெக அரசு பெரும்பான்மையை நிரூபித்தது. இதையடுத்து, அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தின் 17–வது சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தலைமையில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது.
சட்டசபைக்கு வருகை தந்த கவர்னருக்கு கோட்டை பிரதான கட்டிடத்தின் 2-வது நுழைவு வாயில் அருகே போலீஸ் வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. சபாநாயகர், சட்டசபை செயலாளர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து கவர்னரை வரவேற்றனர்.
தமிழ்த்தாய் வாழ்த்து, மற்றும் தேசிய கீதத்துடன் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது
புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மாநில ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் உரையாற்றுகிறார்.
அவரின் ஆங்கில உரையை பேரவைத் தலைவர் ஜேசிடி. பிரபாகர் தமிழில் வாசிப்பார்.
இந்த உரையில் தவெக அரசின் அறிவிக்கப்பட்ட திட்டங்களும், புதிய திட்டங்களும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b