கடற்கரை பசுமை வளையங்கள் விரிவாக்கம் - துணை முதல்வர் பவன் கல்யாண் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை
அமராவதி , 18 ஜூன் (ஹி.ச.) ஆந்திரப் பிரதேசத்தின் நீண்ட கடற்கரை பகுதிகளை சுற்றுச்சூழல் பாதுகாப்புடனும், வளர்ச்சியுடனும் இணைக்கும் வகையில் “கோஸ்டல் கிரீன் பெல்ட்” திட்டத்தை விரிவுபடுத்த அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக துணை முத
A


அமராவதி , 18 ஜூன் (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேசத்தின் நீண்ட கடற்கரை பகுதிகளை சுற்றுச்சூழல் பாதுகாப்புடனும், வளர்ச்சியுடனும் இணைக்கும் வகையில் “கோஸ்டல் கிரீன் பெல்ட்” திட்டத்தை விரிவுபடுத்த அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பாக துணை முதல்வர் பவன் கல்யாண் வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறை உயரதிகாரிகளுடன் சச்சிவாலயத்தில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

கூட்டத்தில் திட்டத்தின் செயல்பாட்டு நிலை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

கடற்கரை பகுதிகளில் அதிகளவில் மரக்கன்றுகள் நட்டு பசுமை வளையங்கள் (Green Zones) உருவாக்குவதன் மூலம் கடல் கரை அரிப்பு

(Sea Erosion) தடுக்க முடியும் என்றும், புயல்களின் தாக்கத்தை குறைக்கலாம் என்றும் துணை முதல்வர் தெரிவித்தார்.

இதற்காக உடனடியாக விரிவான செயல் திட்டம் தயாரிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

மேலும், இந்த திட்டத்தில் அரசு மட்டுமல்லாது உள்ளூர் மக்களையும் இணைத்து செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடற்கரை கிராமங்களில் சமூக வனப்பயிரிடல் (Social Forestry) பணிகளை விரிவுபடுத்தி, அதன்மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் வேலைவாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மொத்தத்தில், மாநிலத்தின் கடற்கரை பகுதிகளை பசுமை வளையங்களால் பாதுகாப்பதோடு, சுற்றுலா வளர்ச்சியையும் ஒருங்கிணைக்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA