Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 ஜூன் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
இன்று காலை 10 மணியளவில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மாநிலம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், அவற்றை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜக தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழக அரசின் மீது பாஜக நடத்தும் முதல் போராட்டமாக இது அமைகிறது.
ஆளும் அரசு சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜகவின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b