சென்னை துறைமுகம் அருகே லாரி மோதி ஜார்க்கண்ட் வாலிபர் பலி
சென்னை, 18 ஜூன் (ஹி.ச.) சென்னை துறைமுகத்தின் ஜீரோ கேட் அருகே அடையாளம் தெரியாத லாரி மோதி ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரோகித் குமார் சிங் (28), விபிடி டிர
Acci


சென்னை, 18 ஜூன் (ஹி.ச.)

சென்னை துறைமுகத்தின் ஜீரோ கேட் அருகே அடையாளம் தெரியாத லாரி மோதி ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரோகித் குமார் சிங் (28), விபிடி டிரான்ஸ்போர்ட் என்ற தனியார் நிறுவனத்தில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

இன்று அதிகாலை 3 மணி அளவில் கண்டெய்னர் லாரியில் சென்னை துறைமுகத்தின் ஜீரோ கேட்டிற்கு வந்துள்ளார்.

பின்னர் தனது லாரியை ஜீரோ கேட் நுழைவாயில் அருகே நிறுத்திவிட்டு கீழே இறங்கி சாலையில் நின்றுகொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத லாரி ஒன்று அவர் மீது மோதியது.

இந்த விபத்தில் ரோகித் குமார் சிங் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராயபுரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், ரோகித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற லாரியை கண்டறிய அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ