சென்னையில் பலத்த காற்றுடன் மழை – மக்கள் மகிழ்ச்சி
சென்னை, 18 ஜூன் (ஹி.ச.) சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு இந்த மழை சற்று நிவாரணம் அளித்தது. நகரின் முக்கிய சாலைகளில் மழை காரணமாக போக்குவரத்து மெதுவாக நகர்ந்தா
மழை


சென்னை, 18 ஜூன் (ஹி.ச.)

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது.

கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு இந்த மழை சற்று நிவாரணம் அளித்தது. நகரின் முக்கிய சாலைகளில் மழை காரணமாக போக்குவரத்து மெதுவாக நகர்ந்தாலும், வெப்பம் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சில இடங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மற்றும் அடுத்த சில நாட்களுக்கும் நகரில் இடியுடன் கூடிய மழை தொடரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மழையால் அண்ணா சாலை, வேளச்சேரி, தாம்பரம், அம்பத்தூர் உள்ளிட்ட சில பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். அதே நேரத்தில் வெப்பம் தணிந்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P