முதல்வர் தலைமையில் இன்று சட்டப்பேரவை கூட்டம் - தொடக்கத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்
சென்னை, 18 ஜூன் (ஹி.ச.) முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று கூட உள்ளது. கூட்டம் இன்னும் தொடங்காத நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவைக்கு வருகை தந்து வருகின்றனர். கூட்டத் தொடக்கத்தில் சமீபத்தில் உயிரிழந்
விஜய்


சென்னை, 18 ஜூன் (ஹி.ச.)

முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று கூட உள்ளது. கூட்டம் இன்னும் தொடங்காத நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவைக்கு வருகை தந்து வருகின்றனர்.

கூட்டத் தொடக்கத்தில் சமீபத்தில் உயிரிழந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. .

இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை பேரவைத் தலைவர் முன்வைக்க உள்ளார்.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் எழுந்து நின்று மரியாதை செலுத்த உள்ளனர்.

இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், உறுப்பினர்கள் மௌன அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து ஆளுநர் அர்லேகர் உரையாற்ற உள்ளார்.

அரசின் சாதனைகள், புதிய திட்டங்கள் மற்றும் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான முக்கிய அம்சங்கள் அவரது உரையில் இடம் பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து கேள்வி நேரம் மற்றும் அரசு அலுவல்கள் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் வருகை தந்து வரும் நிலையில், கூட்டத் தொடக்கத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

.

Hindusthan Samachar / GOKILA arumugam