Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை , 18 ஜூன் (ஹி.ச.)
தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது.
சட்டசபையின் முதல் கூட்டம் என்பதால், இந்த கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்குகிறது.
சட்டசபைக்கு வருகை தந்த கவர்னருக்கு கோட்டை பிரதான கட்டிடத்தின் 2-வது நுழைவு வாயில் அருகே போலீஸ் வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
சபாநாயகர், சட்டசபை செயலாளர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து கவர்னரை வரவேற்றனர்.
தமிழ்த்தாய் வாழ்த்து, மற்றும் தேசிய கீதத்துடன் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. கவர்னர் அர்லேகர் முதல் உரையை வசித்து வருகின்றார்.
இதற்கிடையில் சட்டப்பேரவைக்கு வருகை தந்த திமுகவினர் “வாயை திறங்க CM” என்ற வாசகத்தோடு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர்.
குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, கே.என்.நேரு ஆகியோர் பதாகைகளுடன் வந்துள்ளனர்.
மேலும், ‘தற்குறி ஆட்சி தமிழ்நாடே சாட்சி’, ‘ரீல்ஸ் இங்கே, ரியல் எங்கே?’, ‘தூய சக்தி அல்ல துயர சக்தி’ என்று தவெக ஆட்சிக்கு வந்ததை விமர்சித்தும், ‘கதறல் கேட்கவில்லையா சிஎம்?’ என்று தமிழகத்தில் நிகழும் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு நீதி கேட்பது போலவும் பல்வேறு வாசகங்கள் கொண்ட பேனர்களையும் அணிந்திருந்தனர்.
Hindusthan Samachar / vidya.b