Enter your Email Address to subscribe to our newsletters

வேலூர், 18 ஜூன் (ஹி.ச.)
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
ஆளுநரின் உரை என்பது ஆளுநர் தனிப்பட்ட முறையில் தயாரித்து வாசிப்பது அல்ல என்றும், ஆட்சியில் உள்ள அரசு தயாரித்து வழங்கும் உரையை ஆளுநர் வாசிப்பதே நடைமுறை என்றும் கூறினார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரையில் தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் புதிய ஆட்சியைப் பாராட்டும் வகையிலான கருத்துகள் இடம்பெற்றது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது,
ஆளுநர் உரை என்பது அரசாங்கம் தயாரித்து வழங்கும் ஆவணம். அது ராஜ்பவனுக்கு அனுப்பப்பட்டு, தேவையான ஒப்புதலுக்குப் பிறகு ஆளுநர் அதையே வாசிப்பார்.
அரசாங்கம் தனது ஆட்சியைப் புகழ்ந்து எழுதியிருந்தால், அதைத்தான் ஆளுநர் படிக்க வேண்டும் என்றார்.
மேலும், அரசாங்கம் என்ன எழுதி கொடுக்கிறதோ அதைத்தான் ஆளுநர் வாசிக்கிறார்.
அதற்கு மேல் அவர் தனியாக எதையும் சேர்த்து வாசிப்பதில்லை என்று விளக்கமளித்தார்.
தவெக ஆட்சி குறித்து ஆளுநர் உரையில் இடம்பெற்ற பாராட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த துரைமுருகன்,
இன்னும் சொல்லப்போனால், ‘ஜோசப் விஜய் வாழ்க’ என்று எழுதி இருந்தாலும் அதையும் ஆளுநர் படித்திருப்பார் என்று சிரித்தபடி கிண்டலாகக் குறிப்பிட்டார்.
அதேபோல், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டதாகவும், பழைய வீடியோக்கள் நீக்கப்பட்டதாகவும் வெளியாகும் தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது,
அது குறித்து இன்னும் முழுமையாக படிக்கவில்லை.
முழுமையாக ஆய்வு செய்த பிறகு கருத்து தெரிவிக்கிறேன் என்று துரை முருகன் கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam