தங்கம் விலையில் மீண்டும் மாற்றம் - இன்றைய விலை நிலவரம்?
சென்னை, 18 ஜூன் (ஹி.ச.) .ஜூன் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாகக் குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடையச் செய்தது. அந்த வகையில் நேற்று (ஜூன் 17) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.14,030க்கும், சவரனுக்கு ரூ.240 குற
தங்கம்


சென்னை, 18 ஜூன் (ஹி.ச.)

.ஜூன் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாகக் குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடையச் செய்தது.

அந்த வகையில் நேற்று (ஜூன் 17) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ.14,030க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,240க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்று (ஜூன் 18) தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.

அதன்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,060க்கும், சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,12,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.270க்கும், ஒரு கிலோ ரூ.2,70,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P