ஜனநாயக இணக்கத்தின் தொடக்கமாக இன்றைய நாள் அமைந்துள்ளது - ஆளுநர் அர்லேகர்
சென்னை, 18 ஜூன் (ஹி.ச.) தமிழ்நாடு சட்டமன்றத்தில் புதிய அரசியல் மற்றும் ஜனநாயக இணக்கத்தின் தொடக்கமாக இன்றைய நாள் அமைந்துள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்று ஆண்
அர்லேகர்


சென்னை, 18 ஜூன் (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டமன்றத்தில் புதிய அரசியல் மற்றும் ஜனநாயக இணக்கத்தின் தொடக்கமாக இன்றைய நாள் அமைந்துள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆளுநரின் முழு உரையும் எந்தவித இடையூறும் இன்றி சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்டது மனநிறைவை அளிப்பதாக கூறியுள்ளார்.

மேலும், சட்டப்பேரவையில் முதல் முறையாக ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் நிறைவிலும் தேசிய கீதம் பாடப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாநில அரசு மற்றும் ஆளுநர் மாளிகை இடையே இணக்கமான சூழல் நிலவ வேண்டும் என்ற தமிழக மக்களின் எதிர்பார்ப்பை இந்த நிகழ்வு பூர்த்தி செய்துள்ளதாகவும், இது மக்களாட்சியின் மாண்பை நிலைநாட்டும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தில் ஆளப்படும் அரசானது அனைத்து தரப்பினருடனும் ஒருங்கிணைந்த மற்றும் இணக்கமான உறவை பேணி, மக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதையே தனது இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

அந்த இலக்கை நோக்கி அனைவரும் இணைந்து பயணிக்கத் தொடங்கியுள்ளோம் என்பதே தனக்கு மனநிறைவைத் தருவதாகவும் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P