இமாசல பிரதேசத்தில் பள்ளத்தில் சொகுசு வாகனம் கவிழ்ந்து விபத்து -7 பேர் பலி
சம்பா , 18 ஜூன் (ஹி.ச.) இமாசல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள சத்ரண்ட் பகுதியருகே மஸ்ரூண்ட்–ஹாமல் சாலையில் இன்று அதிகாலை நவீன சொகுசு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர பள்ளத்
A


சம்பா , 18 ஜூன் (ஹி.ச.)

இமாசல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில்

உள்ள சத்ரண்ட் பகுதியருகே மஸ்ரூண்ட்–ஹாமல் சாலையில் இன்று அதிகாலை நவீன சொகுசு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் பலத்த காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.

உயிரிழந்தவர்களின் அடையாளங்களை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

விபத்துக்கான உண்மையான காரணம் இன்னும் தெரியவராத நிலையில், இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த துயர சம்பவத்துக்கு இமாசல பிரதேச முதல்-மந்திரி சுக்வீந்தர் சிங் சுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA