Enter your Email Address to subscribe to our newsletters

லக்னோ , 18 ஜூன் (ஹி.ச.)
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், 2-வது ஒருநாள் போட்டி லக்னோவில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 4 ரன்களில் ஏமாற்றம் அளித்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 48 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தனர். ஆரம்பத்தில் நிதானமாக விளையாடிய இருவரும் பின்னர் அதிரடியில் இறங்கி ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தனர்.
இருவரும் அபார சதம் அடித்து இந்திய அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர்.
சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 154 ரன்களும், இஷான் கிஷன் 125 ரன்களும் குவித்தனர்.
இதன் மூலம் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 402 ரன்கள் குவித்து ஆல்-அவுட்டானது.
பின்னர் 403 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் கட்டுப்பாடான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 232 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் இந்திய அணி 170 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2–0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA