Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 18 ஜூன் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு நீதிமன்றத்தின் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் விழுப்புரத்தில் இருந்து மோப்ப நாய் ராணி வரவழைக்கப்பட்டு நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த சோதனை நடத்தப்பட்டது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீதிமன்ற வளாகம் முழுவதும் சோதனை செய்யப்பட்ட நிலையில் மின்னஞ்சலில் அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்திற்குள் பொதுமக்கள் பலத்த சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி ஷஹ்னாஸ் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Hindusthan Samachar / ANANDHAN