Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 18 ஜூன் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு அருகில் இயங்கி வரும் திருமூலராமவர்ம அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (மகளிர்) 2026 ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவியர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்கான விண்ணப்பங்களை வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
அவரது அறிவிப்பின்படி ஆடை தயாரித்தல் தொழிற்பிரிவிற்கு மட்டும் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதர பிரிவுகளுக்குப் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் அதற்கு மேல் எந்தவொரு பட்டப்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 14 ஆண்டுகள் ஆகும்; அதிகபட்ச வயது வரம்பு ஏதும் இல்லை.
வழங்கப்படும் தொழிற்பிரிவுகள்:
இங்கு முற்றிலும் இலவசக் கட்டணத்தில் வழங்கப்படும் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத 8 முக்கிய தொழிற்பிரிவுகள்:
கம்மியர் மின்னணுவியல் (Electronics Mechanic)
டெஸ்க் டாப் பப்ளிஷிங் ஆபரேட்டர் (DTP Operator)
கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராம் அசிஸ்டெண்ட் (COPA)
ஆடை தயாரித்தல் (Dress Making)
சுருக்கெழுத்து மற்றும் செயலக பணி உதவியாளர் - ஆங்கிலம் (Stenographer)
நவீன ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம் (Fashion Design Technology)
மருத்துவ மின்னணுவியல் நுட்பவியலாளர் (Medical Electronics)
கட்டிடக்கலை படவரைவாளர் (Draughtsman Civil)
பயிற்சி காலத்திலேயே முன்னணி தொழில் நிறுவனங்களில் சுயதிறன் வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பும் (On the Job Training), பயிற்சி முடியும் முன்பாகவே 100% வளாக நேர்காணல் (Campus Interview) மூலமாக வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும்.
பத்தாம் வகுப்பு முடித்த பின்னர் 2 ஆண்டுகள் ஐடிஐ பயிற்சி முடிக்கும் பயிற்சியாளர்கள், மொழிப்பாடங்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) மட்டும் எழுதி, 12-ஆம் வகுப்புக்கு இணையான மாநில அரசின் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் விபரங்கள் அறிய விரும்பும் மாணவிகள் 9499055807, 04652-222569, 9095680040, 9688333469 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b