கெலவரப்பள்ளி அணைக்கு 1,000 கனஅடிகளை கடந்து நீர்வரத்து
கிருஷ்ணகிரி, 18 ஜூன் (ஹி.ச.) கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1381 கன அடி நீர் வரத்தாக இ
Kelavarappalli Dam


கிருஷ்ணகிரி, 18 ஜூன் (ஹி.ச.)

கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1381 கன அடி நீர் வரத்தாக இருந்த நிலையில், இன்று அணைக்கு 1038 கனஅடியாக உள்ளது . அணையில் இருந்து 1200 கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியாகும், அணையில் தற்போது 4248. அடிவரை நீர் உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1200 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவு நீர் செல்லும் நிலையில் அதில் கடுமையான துர்நாற்றத்துடன் குவியல் குவியலாக இரசாயண நுரைகள் செல்கிறது.

தொடர்ந்து பல நாட்களாக இந்த முறைகள் செல்வதால் ஓசூர் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN