மினி வேன் இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்து - ஓட்டுநர் பலி
கொல்லம், 18 ஜூன் (ஹி.ச.) கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் மினி வேன் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 36 வய
விபத்து


கொல்லம், 18 ஜூன் (ஹி.ச.)

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் மினி வேன் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.

திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயதான ரஞ்சித், கொல்லம் மாவட்டத்தின் சடையங்குளம் குரியோடு பகுதியில் உள்ள எம்.சி. சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது திருவனந்தபுரத்திலிருந்து வந்த மினி வேன் ஒன்று அவர் மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ரஞ்சித் பலத்த காயமடைந்தார்.

உடனடியாக அப்பகுதி மக்கள் அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி ரஞ்சித் உயிரிழந்தார்.

இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மேலும், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பும் இதே பகுதியில் பாதசாரி ஒருவர் கார் மோதி உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

தொடர்ந்து விபத்துகள் நடைபெறும் பகுதியாக இது மாறிவிட்டதால், உடனடியாக எச்சரிக்கை பலகைகள் மற்றும் தடுப்பு கம்பிகளை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P