16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலி தொழிலாளி கைது
திருநெல்வேலி, 18 ஜூன் (ஹி.ச) திருநெல்வேலி மாவட்டம் நெல்லை சந்திப்பு அருகேயுள்ள மணிமூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் (28) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய
Child Harassment


திருநெல்வேலி, 18 ஜூன் (ஹி.ச)

திருநெல்வேலி மாவட்டம் நெல்லை சந்திப்பு அருகேயுள்ள மணிமூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் (28) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூலித்தொழிலாளியாக பணியாற்றி வரும் பெருமாள், சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி பழகியதாக கூறப்படுகிறது. பின்னர், இரவு நேரத்தில் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் நெல்லை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில், போலீசார் பெருமாள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக இருந்த பெருமாளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை பெருமாளை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Hindusthan Samachar / ANANDHAN