நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை
நெல்லை, 18 ஜூன் (ஹி.ச.) திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்டிஓ) இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு, உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக ப
ஆர்டிஒ


நெல்லை, 18 ஜூன் (ஹி.ச.)

திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்டிஓ) இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு, உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக பொதுமக்களிடம் அதிக அளவில் லஞ்சம் பெறப்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் நடவடிக்கையாக அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

அலுவலகத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மேசைகள், முக்கிய ஆவணங்கள், கணினி பதிவுகள் உள்ளிட்டவை தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் கணக்கில் வராத பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் ஏதேனும் உள்ளனவா என்பதையும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

திடீர் சோதனை காரணமாக வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

சோதனையின் முழுமையான விவரங்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை.

Hindusthan Samachar / VINOTH KUMAR P