Enter your Email Address to subscribe to our newsletters

போபால், 18 ஜூன் (ஹி.ச.)
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு 5 நாள் பயணமாக மத்தியப் பிரதேசம் சென்றுள்ளார்.
டெல்லியில் இருந்து இந்தூருக்கு வந்தடைந்த அவரை, மத்தியப் பிரதேச கவர்னர் மங்குபாய் படேல் மற்றும் முதல்-மந்திரி மோகன் யாதவ் ஆகியோர் வரவேற்றனர்.
இதையடுத்து பேதூல் நகருக்கு செல்லும் ஜனாதிபதி, அங்கு நடைபெறும் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர் இன்று மாலை புகழ்பெற்ற ஓம்காரேஷ்வர் மற்றும் மாமலேஷ்வர் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
நாளை ஜபல்பூருக்கு செல்லும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, வருகிற 21-ந் தேதி நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியிலும், ராணி துர்காவதி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து 22-ந் தேதி குனோ தேசியப் பூங்காவை பார்வையிட்டுவிட்டு டெல்லி திரும்புவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜனாதிபதியின் வருகையையொட்டி மத்தியப் பிரதேசம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA