Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 18 ஜூன் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே உள்ள புன்னையாபுரம் பகுதியில் உள்ள திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பள்ளி மாணவர்கள் உட்பட 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த விரைந்து சென்ற புளியங்குடி மற்றும் சொக்கம்பட்டி போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் புளியங்குடி பகுதியை சேர்ந்த ராமசாமி என்ற ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோவில் நிர்ணயிக்கப்பட்ட பயணிகளை விட கூடுதலாக 8 நபர்களை ஏற்றி மொத்தம் 11 நபர்களுடன் பயணம் செய்த நிலையில், செல்போனை பேசியபடியும் ஆட்டோவை இயக்கியதால் தான் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ராமசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பள்ளி சிறுவர், சிறுமிகளை ஏற்றி செல்ல ஆட்டோவிற்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தும் இது போன்ற தவறுகள் நடக்க காரணம் என்ன? இது தொடர்பாக அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN