Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 18 ஜூன் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த சிட்டிலம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலயத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கோபுர விமானம், மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூர்–திருவாதவூர் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி விநாயகர் கோவிலின் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து விமான கும்பத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஸ்ரீராம்பூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் – ஸ்ரீ ராக்காயி அம்மன் கோயிலில் நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற யாகசாலை பூஜைகளுக்குப் பிறகு கோபுர கலசங்களில் புனித தீர்த்தம் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam